மெகா டிவியில் காலை 7.15 க்கு கவனகர் சொற்பொழிவில் கிடைத்த ஒரு தகவல். இதை பதிவேற்ற எண்ணம் இருந்தும் நேரமின்மையால் பொறுத்திருந்தேன். சாருநிவேதிதா அதை பதிவேற்றம் செய்திருக்கிறார். தன் கட்டுரைக்காக சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்ததால் அவருக்கு நன்றியைச் சொல்லி இங்கே...
கனக சுப்புரத்தினம் என்பவரின் ஆன்மீகச் சொற்பொழிவு. ஒரே ஒருநாள் அதைக் கேட்டேன். அதில் அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். மதர் தெரஸா கல்கத்தாவில் ஆசிரமத்தை ஆரம்பித்த புதிதில் அதற்குத் தேவையான பணச் செலவுக்காகத் தன்னுடன் சில குஷ்ட நோயாளிகளை அழைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று பெரிய கடைகளில் பிச்சை கேட்பாராம். ஒருநாள் ஒரு சேட்டுக் கடையில் கேட்கிறார். சேட்டு அன்றைய தினம் (இதை வியாபார நேரத்தில் தொந்தரவாக நினைத்து) மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ” வேறு இடம் பார் ” என்கிறார். தெரஸா தன்னுடைய ஆசிரமத்தைப் பற்றிச் சொல்லி உதவி கேட்கிறார். சேட்டுக்குக் கோபம் எல்லை மீறுகிறது.
“உன்னிடம் தருவதற்கு இப்போது எதுவும் கிடையாது. ”
“இருப்பதைத் தாருங்கள்; போதும். ”
“இதோ இதுதான் இருக்கிறது ” என்று சொல்லி தெரஸாவின் முகத்தில் காறி உமிழ்கிறார் சேட்.
உடனே தெரஸா “எனக்கு இது போதும்; இவர்களுக்கு ஏதாவது தாருங்கள் ” என்று மிக அமைதியாகச் சொல்கிறார்.
இதைக் கேட்டதும் சேட் ஆடிப் போய் விடுகிறார். அன்றைய தினத்திலிருந்து தங்கள் நிறுவனத்திலிருந்து ஆண்டு வருமானத்தில்,(இலாபத்தில்) பத்து சதவிகிதத்தை மதர் தெரஸாவின் ஆசிரமத்துக்கு இன்று வரை கொடுத்து வருகிறார்கள் சேட்டின் குடும்பத்தினர்.
மீண்டும் சந்திப்போம்
ஏற்கனவே கேட்ட செய்திதான்,
ReplyDeleteஇருந்தாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
உண்மைதான் நண்பரே.,
ReplyDeleteஅவருடைய பேச்சிலேயே பல முறை கேட்டிருக்கிறேன்.
அன்னையின் பொறுமை,பார்வை இவற்றில் கொஞ்சமேனும் நமக்கு வரவேண்டும் என்பது என் அவா
அருமையான பகிர்வு,சிவா.இத்தனை அவலச் செய்திகளுக்கு மத்தியில் இது போன்ற நல்ல விஷயங்கள் காதில் விழுந்து கொண்டே இருந்தால்தான் மனைத குலம் உய்யும்.
ReplyDeleteதங்களை இங்கு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி,
ReplyDeleteவாழ்த்துக்கள்
அன்பின் சிவா
ReplyDeleteதெரிந்த கதைதான் - இருப்பினும் அவ்வப்பொழுது நல்ல செய்திகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள்