ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்
எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?
ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்
உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.
இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.
இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்
இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.
இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.
அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.
அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.
நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்
’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.
கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.
நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.
பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.
உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.
தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.
நன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி
நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி ! ( நான் வால்பையனைச் சொல்லவில்லை)
ReplyDelete:)
இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்
ReplyDeleteகண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))
யார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே ?
ReplyDeleteவேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?
கோவி கண்ணன் கேட்டது:
ReplyDelete/மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?/
அறிவுரை, ஆத்தங்கரைஎல்லாம் போயே போச்சு! it is gone:-))
மக்களுக்கு இப்ப அறிவுரை எல்லாம் தேவையே இல்லை! லேட்டஸ்டா நயன்தாரா யாரோட சுத்திக்கிட்டிருக்கார், நமீதான்னு அடிச்சாலே, தேடுபொறி கூகிள் கூட மூணு கோடி தடவை தேடப்பட்ட பேருன்னு போன வருஷம் காட்டிச்சாம், இப்ப அது எத்தனை கோடியா வளந்திருக்கும், இது தான் முக்கியக் கவலையே!
இப்படிப் பாப்பமா?
தெனாலி ராமன் பூனை மாதிரி, சூடு பட்டவன் வேதாந்தி! ஒரு தரம் பட்ட சூட்டுலேயே,
எதைப்பாத்தாலும் சூடு தான் முன்ன வந்து நிக்கும்!
சூடு படக் காத்திருப்பவன் சித்தாந்தி! சூடுன்னா என்னன்னு தெரிய வர்ற வரைக்கும், அதைப் பத்தி 'வித விதமா சோப்பு சீப்புக் கண்ணாடி'ன்னு பாடிட்டிருக்கிறவன்!
அப்ப நாம?
அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க!
அம்புட்டுத்தேன்:-))
வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.
ReplyDeleteகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.
/இடுகை சுமாரத்தான் வந்திருக்கும்னு முதல்ல நினைச்சேன்
ReplyDeleteகண்டிப்பா இடுகை நல்லா வந்திருக்குன்னு இப்போ நம்புறேன் கோவியாரே,:))/
கோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))
கோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா?
:-))))
//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.
ReplyDeleteபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
\\கோவி.கண்ணன் said...
ReplyDeleteயார் சொல்வது சரின்னு சொல்லவே இல்லையே ?
வேதாந்தியா சித்தாந்தியா மக்களுக்கு நெருக்கமானவர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவுரை கூறுபவர்கள் யார்?\\
சித்தாந்தமே சரி என்பது என் கருத்து, அதற்காக வேதாந்தம் தவறு என்று அர்த்தம் இல்லை, சித்தாந்தம் நேர்வழி, வேதாந்தம் சற்றே சுற்று வழி.
’போய் சேரும் இடம் ஒன்றுதான்’
இரு வழிகளுமே மக்களுக்கு பயன்படக்கூடியதுதான்.சித்தாந்தம் சற்று எனக்கு நெருக்கமாக இருப்பதாக நான் உணர்கிறேன்
Kesavan \\வேதந்தமோ, சித்தாந்தமோ மனிதன் மனிதனாகவே இருக்க மாட்டேன் என்கிறான், எனும் போது என்ன செய்ய, எல்லாம் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக் கிட்டு இருக்கான் என்று சும்மா இருக்கவும் முடியல.
ReplyDeleteகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையில்.\\
மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமானால் சித்தாந்தமோ, வேதாந்தமோ இது குறித்த விழிப்புணர்வு நம்மிடையே பரவ வேண்டும்.
அப்போதுதான், தன்நலம், சமுதாயநலம் காக்கமுடியும்
கடவுள் என்று தனியாக எவருமில்லை,
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்பது நம் கையில்தான்.
வாழ்த்துக்கள்
கிருஷ்ணமூர்த்தி said...
ReplyDeleteகோவியார் வந்து கேள்வி கேட்டதுமே, சுமார் தான்னு நினைச்சது கூட, நல்லா வந்திருக்குன்னு தெளிவாயிட்டீங்களே:-))
கோவியார் கேட்டது சித்தாந்தமா, இல்ல வேதாந்தமா?\\
இரண்டும் இல்லை, இடுகை ஏதும் போடவில்லையா என அன்போடு விசாரித்தார். சரி என்று இந்த இடுகையை போட்டுவிட்டேன். இதற்கு போடமலேயே இருந்திருக்கலாம் :)) என்கிற பொருளில் தலைப்பு வேறு ‘எப்படி புரிந்து கொள்வது’ என்று இருக்கிறதா,
சுத்தமா புரியவில்லை, இதில் மனசே ஈடுபடவில்லை என்கிற அர்த்தத்தில் பள்ளிக்கூட மாணவன் நுழைஞ்சிட்டு நுழைஞ்சிட்டு...வால் ஒண்ணு தான் பாக்கி என்று வாத்தியாரிடம் சொல்வதுபோல் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்,
போலி ஆத்திகத்தை சாடக்கூடிய நண்பர் கோவி.கண்ணனுக்கு இந்த இடுகை சுவாரசியமாக இல்லை:) என்றால் இதில் போலி இல்லை, உண்மை இருக்கிறது என்றே பொருள் கொண்டேன்.
ReplyDeleteஉண்மை நிறைய இருக்கிறது என்பதாக, சான்றாக நான் எடுத்துகொண்டதால் ஒரு ஆன்மீகவாதி பாராட்டியிருந்தால் கூட இடுகையின் உள்ளடக்கம் மனநிறைவை கொடுத்திருக்காது.
இவர் புறக்கணித்தது நான் சரியாக கொடுத்திருப்பதாக் உறுதி செய்து கொண்டேன். இது என் பார்வையே, :))
Robin s//இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.// புரியவில்லை.
ReplyDeleteஅன்பு நண்பரே
கடவுள்நிலை முதல் எதையும் இதுவா எனக்கேட்டால் இது இல்லை என பிரித்துக்காட்டி விளங்கவைக்கும் தத்துவம் வேதாந்தம், வெளிநோக்கிய பார்வை எதிலுமே
சித்தாந்தம் எதையும் உள்நோக்கி பார்க்கும், எல்லாவற்றையும் இணைத்தே பார்க்கும். இது நான் புரிந்து கொண்ட அளவில், இன்னும் நான் கற்கவேண்டியதும், உணர வேண்டியதும் நிறைய இருக்கிறது நண்பரே
\\உலவு.காம் (ulavu.com) said...
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்\\
நன்றி, ஏற்கனவே இணைத்துக் கொண்டிருக்கிறேன்
இத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன்.
ReplyDeleteஇன்று புரிந்து கொண்டேன்.
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை.
அருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட! சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே.
\\வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteஇத்தனை காலமாக வேதாந்தம் எது, சித்தாந்தம் எது எனப் புரியாமாலே இருந்தேன்.
இன்று புரிந்து கொண்டேன்.
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம் என்பதை தவறாகவேப் புரிந்து கொண்டேன் இதுநாள் வரை.
அருள் மார்க்கம் சித்தாந்தம்; இருள் மார்க்கம் வேதாந்தம். அட! சிறப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி சிவா அவர்களே.\\
சித்தாந்தம், வேதாந்தம் இவற்றின் அடிப்படை அம்சங்கள் தெரிந்து இருந்தாலும் இத்தனை நாள் நானும் பிரித்துப்பார்க்கத் தெரியாது இது பெரிய விசயம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.
பிரித்து பார்த்தபின் தான் தெரிந்தது. இரண்டுக்கும் கடவுள் நிலை பற்றித்தான் வேறுபாடே தவிர நம் இல்வாழ்க்கைக்கு இரண்டுமே வசதியானதுதான்.
மிக அருமையான கருத்துக்கள்.
ReplyDeleteமுக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.
ReplyDeleteமிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.
அப்ப நாம?
அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க!
வேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல.
ReplyDeleteசித்தாந்தம்,சித்தத்தின் முடிவு.
ஒன்று நூலறிவு.
இன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.
இரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.
இரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு?
அத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.
\\சிங்கக்குட்டி said...
ReplyDeleteமிக அருமையான கருத்துக்கள்\\
நன்றிகள் நண்பரே
\\முக்கால் கிறுக்காக உள்ள என்னை முழு கிறுக்கனாக மாற்றி விடுவீர்கள் போல. படிக்க படிக்க பயமாய் உள்ளது. எதை எப்படி பதிலாக இடுகையில் இடுவது என்று யோசித்த போது கிருஷணமூர்த்தி என்பவரை எனக்காகவே உங்கள் ஆத்ம சக்தி அனுப்பி இருக்கும் போல.
ReplyDeleteமிக மிக தௌிவான பதில். பதில் இல்லை எதார்த்தம்.
அப்ப நாம?
அந்த ரெண்டுக்கும் நடுவே அல்லாடிக் கிட்டிருக்கிறவங்க!\\
சித்தாந்தியாகவோ, அல்லது வேதாந்தியாகவோ நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை, பிறரையும் அப்படி பார்க்க வேண்டியதில்லை :))
மனிதனாகப் பார்த்தால் போதும், அதற்கான முயற்சியே இது, சூழ்நிலை காரணமாக நமக்கு இந்த பட்டம் வருமேயானால் அப்போது நாம் குழம்பாமல் இருக்கவே இது குறித்த சிறு விளக்கமாக பார்த்தால் போதும்.
நல்லா இருக்கறவங்கதான் நாம் கிறுக்கா ஆயிடுவோம் அப்படின்னு கவலைப்படணும். நமக்கு அந்த கவலை வேண்டியதில்லை :))
அல்லாடுவது என்பது தவறு இரண்டையுமே நாம் வாழ்வில் எந்த ச்ந்தர்ப்பங்களில் பின்பற்றுகிறோம் என கவனித்தால் போதும். விழிப்புணர்வுக்கான பதிவுதான்.:))
வருகைக்கு நன்றிகள் திரு. ஜோதி அவர்களே
\\ஷண்முகப்ரியன் said...
ReplyDeleteவேதாந்தம் வேததின் அந்தம்,அதாவது வேதங்களின் முடிவு.உபநிடதங்களையே வேதாந்தம் என்று கூறுதல் மரபு.கற்றுத் தெளிந்து டிகிரி வாங்கியதைப் போல.
சித்தாந்தம்,சித்தத்தின் முடிவு.
ஒன்று நூலறிவு.
இன்னொன்று மனம்ற்றுப் போனதில் கிடைத்த அனுபவ அறிவு.
இரண்டுக்கும் உண்மையில் முரண்பாடு என்பதே கிடையாது,சிவா.\\
அன்புச்சகோதரரே முரண்பாடாக நானும் குறிப்பிடவே இல்லை.:))
ஒரு வட்டம் () கீழிருந்து ஆரம்பித்து மேலே சென்று முடிவதாக வைத்து கொண்டால் ஒருபுறம் வேதாந்தம், ஒருபுறம் சித்தாந்தம்,
ஆரம்பிக்கும் இடமும்,முடியும் இடமும் ஒன்றேதான், ஆனால் பயணப்பாதைதான் வேறுவேறு. அவ்வளவுதான்
\\இரண்டு என்பது இருந்தால்தானே முரண்பாடு?
அத்வைதம் வேண்டுமானால் முரண்பாடாக இருக்கலாமே அன்றி, அத்வைதத்திற்குள் முரண்பாடுகள் கிடையாது.\\
சித்தாந்தம் உள்நோக்கிய இறைபயணம்,
வேதாந்தம் வெளிநோக்கிய இறைபயணம்
சித்தாந்தம் இவ்வுலக பற்றுகளை விடுத்து இறைநிலை உணர்தல்,
வேதாந்தம் இவ்வுலக விசயங்களை முறையாக அனுபவித்து உணர்தல்
இறை எங்கும் இருப்பது, அதனால் சித்தாந்தம் வேதாந்த வழிமுறை வித்தியாசத்தை தெளிவு படுத்தும் நோக்கம் மட்டுமே இந்த இடுகையில் உள்ளது.
முரண்பாடு இல்லை.
நாம் பயணிக்கும் பாதை எது, அதன் தன்மை என்ன என்ற விளக்கம் தான் இந்த இடுகை
நன்றி கூடுதல் விளக்கம் கொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு...
எல்லாம்சரி வேதாந்தத்தை இருள்மார்கம் என கூறுவது தவறு திறுத்தி கொள்ளவும் உடனடியாக இல்லையேல் உங்கள் கருத்துஅனைத்தும் தவறே
ReplyDelete