சதுரகிரி பயணத்தை வணிகரீதியாக நடத்தி வரும் நண்பர் ஒருவர் 24 டிசம்பர் அன்று பயண ஏற்பாட்டினை தெரிவித்தார். இரவு 11.30 க்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பினோம். 14 பேரில் பாதி வயதான பெண்கள், மீதி ஆண்களுமாக கிளம்பினோம். வேன் டிரைவர் அந்த வேனுக்கு புதியவர் ஆதலால் பொறுப்பாக மெதுவாக ஓட்டிச் சென்று, போகும் வழியில் இரவு விருதுநகர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த இரண்டு பெண்களையும் பயணத்தில் இணைத்துக்கொண்டு காலை 6 மணி அளவில் திருவில்லிப்புத்தூர் சென்று சேர்ந்தார். முன்னதாக கிருஷ்ணன்கோவில் பிரிவில் நாங்கள் பிரிந்து தாணிப்பாறை போயிருக்கவேண்டும்.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Monday, January 31, 2011
Monday, January 24, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 1
சதுரகிரி மலைப்பயணத்தின் முன்னதாக என் மனநிலை என்ன என்பதை கொஞ்சம் நினைவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன். சதுரகிரி பற்றி ஆனந்தவிகடன் முக்கியத்துவம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. இதற்குமுன் சதுரகிரியைப்பற்றி எனக்குத் தெரியாது. சதுரகிரி மலை குறித்த வரலாறு படிக்க படிக்க வியப்பே மேலிட்டது.
Saturday, January 1, 2011
ஆனந்தத்தின் பிரகடனம் - (ஈஷா)
மனிதன் எந்தவொரு செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அதன் அடிப்படை, எந்த விதத்திலாவது ‘தான்’ ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம்தான். ஆனால் குழந்தைகளையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்தால் யார் ஆனந்தமாக இருக்கிறார்கள்.? ஏன்? :)
நீங்கள் கவனித்துப்பார்த்தால் சந்தோசம், ஆனந்தம் எதுவாக இருந்தாலும் எப்போழுதுமே அது உங்கள் உள்ளிலிருந்துதான்
வெளிப்பட்டு இருக்கிறது. காரணம் வெளியே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றாலும் இந்த ஆனந்தத்திற்கு மூலம் நமக்குள்தான் இருக்கின்றது.
நீங்கள் கவனித்துப்பார்த்தால் சந்தோசம், ஆனந்தம் எதுவாக இருந்தாலும் எப்போழுதுமே அது உங்கள் உள்ளிலிருந்துதான்
வெளிப்பட்டு இருக்கிறது. காரணம் வெளியே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றாலும் இந்த ஆனந்தத்திற்கு மூலம் நமக்குள்தான் இருக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)