முன்பெல்லாம்
புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது
மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது. முகம்மது
நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது. கிறிஸ்துவர்களுக்கு இயேசுவை
மட்டுமே தெரிந்திருந்தது . ஆனால்
இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப்
போயிருப்பது அனைத்துக்கும், நாம்
வாரிசாகப் போயிருக்கிறோம்.
இயேசுவைத் தெரியும், ஸாரதூஸ்ட்ராவைத்
தெரியும், பதஞ்சலி,
புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப்
போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும். உன் மனதில் எல்லாமும்
ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க்
கிடக்கின்றன. இந்த
குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே
கொண்டு வருவது முடியாத காரியம்
ஆகிவிட்டது .
ஒரே வழி என்னவென்றால்
இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்., பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே
என்னுடைய செய்தி.
அப்படி அவற்றை விட்டொழித்து
விடும் போது, இயேசுவை வீசி
எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ விட்டு
விலகி விடுவதும் இல்லை. மாறாக அவற்றை விடுவதன்
மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.
அப்படி
விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள்
சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு
பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்
பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்
ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா