"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 12, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 5

இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது லேசாக தலைசுற்றல் ஆரம்பித்தது. அப்படியே அமர்ந்தவாறு மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்துவிட்டுக்கொண்டே என்னுள் நடப்பதை கவனித்தேன். மெல்ல காது அடைத்தது. நண்பர்கள் பேசுவது எல்லாம் கேட்பது குறையத்துவங்க, கண்ணுள் பூச்சி பறந்தது. இதெல்லாம் சுமார் 20 முதல் 30 விநாடிக்ள் இருக்கும்.

மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.

Monday, July 11, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 4

நியாலத்தில் அன்று இரவு தங்கினோம். ஒரு அறையில் 7 பேர், கிட்டத்தட்ட சின்ன சின்ன குழுக்களாக எங்களை அறியாமலே சேர்ந்துவிட்டோம். மாலைவரை உடலில் குளிரின் தாக்கம் தெரியவில்லை. ஆனால் இரவு வந்தவுடன் குளிர் அதிகமாகிவிட்டது. இதை எப்படி தாங்குவது?

தெர்மல்வேர் என்கிற உடலை ஒட்டிய ஆடைகள் (உள்ளாடைகளுக்கு அடுத்ததாக)அணிந்து கொண்டோம். இந்த உடைகள் என்றால் என்ன என தெரியாமல் வந்த நண்பரும் உண்டு. இந்த உடைகள் உள்பக்கம் ரைசிங் என்கிற நுட்பத்தில் பஞ்சு வெளியே தெரியும் வண்ணம் செய்யப்பட்ட பனியன் துணியினால் ஆனது.

Thursday, July 7, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 3

நாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.

Wednesday, July 6, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 2

நட்புபாலத்தில் எந்த வாகனமும் போக அனுமதி கிடையாது. நடந்துபோக மட்டுமே அம்மாம் பெரிய பாலம்., இது எதுக்குன்னு சீன அரசாங்கத்துக்கே வெளிச்சம். அந்த நட்புப்பாலத்தை கடந்தால் அந்த முனையில் இரண்டு சீன இராணுவ சிப்பாய்களின் சிலைகள் பாலத்தின் இருபக்கமும் கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தன.

நடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட  அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும்  நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.

Thursday, June 30, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 1

ஜீன் 5 ந் தேதி காலை டெல்லி பயணம், அங்கே பாஸ்போர்ட்களை டிராவல் ஏஜென்சி அன்பர் கொண்டு வந்து கொடுக்க, அப்படியே நேபாள் தலைநகர் காட்மண்டு வரை  ஜெட் ஏர்வேஸ் விமான பயணம்.

எங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.

Friday, May 27, 2011

படித்ததில் பிடித்தது 27/05/2011

செட்டிநாட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடல் ஒன்று படித்ததில் பிடித்ததாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....


நல் ஆவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
                                                        --வ.சுப.மாணிக்கனார்






நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா