"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 27, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி-11

மானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாமல் அடி ஆழம் வரை பார்க்கும் வண்ணம் இருந்தது. மறுகரையில் அனைத்து ஜீப்புகளும் நிறுத்தப்பட, கரையில் கிடந்த கற்களில் தனக்குகந்த மூர்த்தங்களை நண்பர்கள் பொறுக்கி எடுத்தனர். நான் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டேன்.  மானசரோவர் ஏரி இந்த இடம் அந்த இடம் என்று வேறுபாடு இல்லாது எல்லா இடத்திலும் அதன் சக்தியை எளிதில் உணர முடிந்தது.

Monday, July 25, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி-10

அடுத்தநாள் (12/06/2011)முழுவதும் மானசரோவரில்தான் தங்கினோம். நாங்கள் ஒருநாள் முன்னதாக வந்துவிட்டது முக்கிய காரணம், தட்பவெப்பநிலையை, உடல் ஏற்றுக் கொள்ள இன்னும் உதவியாக இருந்தது.கூட வந்த நண்பர் தனுஷ்கோடி (வயது 60)அவர்களுக்கு உணவு முறைகள் ஒத்துகொள்ளாமல் உணவை நிறுத்தி விட்டார். என்னால் பரிக்ரமா செய்ய நிச்சயம் முடியும். இதை சொல்வதைவிட செய்துகாட்டுவேன் என்றவர், இரவு மானசரோவர் குளிர் தாங்க முடியாமலும், உணவை அடியோடு ஒதுக்கி விட்டதாலும், பரிக்ரமா தேவையில்லை. வீடு சென்று சேர்ந்தால்போதும் என்றார். இதை நான் இங்கே குறிப்பிடக்காரணம். அவரை குறை சொல்வதற்காக அல்ல.

Friday, July 22, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 9

மானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்காலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.

Thursday, July 21, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 8

மானசரோவர் ஏரி  கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்தது ஏரி. வாகனத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம். எப்போது மானசரோவரில் நீராடலாம் என்கிற ஆர்வம் அடக்க முடியாததாக இருந்தது.

Saturday, July 16, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 7

பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள  சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு இடமில்லை என்று அதற்கு அடுத்ததாக(மொத்தம் 375 கிமீ) டோங்பா என்ற இடத்தில் ஏழுமணிநேரம் ஜீப்பில் பயணித்து தங்கினோம். இடமில்லை என்ற காரணம் உண்மையானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாகா ஊரை கடக்கும்போது அங்கு நிறைய தங்கும் வசதியுடைய கட்டிடங்கள் இருந்தன. ஒருவேளை கட்டணங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். நமது வழிகாட்டி பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக டோங்பா சென்றிருக்கலாம் என்பது என் கணிப்பு, டோங்பா வசதிகள் மிகக்குறைவாகவே இருந்தது.

Wednesday, July 13, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 6

மலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.