எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Saturday, October 1, 2011
Friday, September 30, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 25
திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு:). நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே
Wednesday, September 28, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 24
கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.
Thursday, September 22, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 23
திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர்.
Monday, September 12, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 22
நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை நீடிக்க நீடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக மனமும் "முடியல முடியல" எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொல்லவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உயரம் செல்லச் செல்ல குளிர்காற்று இன்னும் அதிகமாகி உடலைத் துளைத்தது. .
Friday, September 9, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 21
ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பித்தோம். இதுவரை நடப்பதற்கான பாதையேனும் ஓரளவிற்கு தெரிந்தது. இப்போது முழுக்க முழுக்க பாறைக்கற்கள் மேல் நடக்க வேண்டி இருந்தது. இடைஇடையே பனிக்குவியல் கிடந்தது. அந்த இடங்களையும் தாண்டிச் சென்றோம். அந்த பனிக்குவியல்களில் ஏற்கனவே யாத்திரீகர்கள் முன்னர் நடந்து சென்ற கால் தடங்களின் மீதே நாங்களும் நடந்து சென்றோம். பனிக்குவியலில் கால்கள் அரை இன்ஞ் முதல் ஒரு இன்ஞ் வரை புதைய ஆரம்பித்தது. இதைத் தவிர்கக இயலாது. கால் தடங்களைத் தவிர்த்து, விலகி,அருகில் கிடந்த பனியின் மீது நடக்க முயற்சிப்பது ஆபத்தே..
Subscribe to:
Posts (Atom)