காலை 7 மணிக்கு கிளம்பிய நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். சுமார் 9.15 மணிக்கு டோல்மாலாபாஸ் அமைந்திருக்கின்ற மலை அடிவாரத்தை அடைந்தோம். முதல் மூன்று படங்களும் போகும் வழியில் எடுக்கப்பட்டவை, திருக்கைலையை விட்டு சற்று விலகித்தான் இனி பாதை செல்லும். அதன் வழியே யாத்திரை தொடர்ந்தது...
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Thursday, August 25, 2011
Saturday, August 20, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 18
ஜீன் 15 ம் தேதி, விடியலுக்கு முன் எங்களை வழிகாட்டி தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதோடு. இரவு மழை ஏதும் இல்லாததால், மற்ற குழுக்கள் செல்வதாகவும் நாங்களும் கிளம்பலாம் என எங்களின் இரண்டாவது நாள் பரிக்ரமாவை உறுதி செய்தார்.
Friday, August 19, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 17
மூன்று நாள் கோரா எனப்படும் பரிக்ரமாவில் உள்ள சிரமங்கள் அலசப்பட்டன. ஒரு நாள் பரிக்ரமாவை முடித்துக்கொண்டு, மறுநாள் திரும்பினால் கூடவே சமையல்குழுவும் இருப்பதால் உணவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்று நாள் பரிக்ரமாவில் அடுத்த இரண்டு நாளுக்கு உணவு சமைக்க இயலாது. காரணம் பொருள்கள் கொண்டு போவதில் உள்ள சிரமங்கள்., இரண்டாம் நாள் பயண நேரம் 10-12 மணி நேரம் இருக்கலாம்.ஒரு ஆப்பிளும் ஒரு பாக்கெட் ஜீஸ் மட்டுமே ஒவ்வொரு வேளைக்கும் கொடுக்கப்படும். இதற்கு வருபவர்கள் தயாராக இருக்க வேண்டும்.:)
Tuesday, August 16, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 16
நடந்து வந்ததின் களைப்பு அனைவரிடத்திலும் ஆக்ரமித்து இருக்க, கிடைத்த படுக்கைகளில் அனைவரும் ஓய்வெடுத்தனர். வழக்கமான உரையாடல்கள் எதுவும் இல்லை:). விட்டால்போதும் என்கிற மனநிலை பலருக்கும்:)). அப்போது வழிகாட்டி வந்து அனைவரும் தயவு செய்து ஒரு மணி நேரம் உறங்க வேண்டாம். படுப்பதைவிட அமர்ந்து கொண்டால் நலம். உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்றார்.
Monday, August 15, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 15
லா சூ பள்ளத் தாக்கில் திபெத்திய யாத்திரீகர்கள் எங்களைப்போல் பாதயாத்திரையாக வந்தாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை.திருக்கைலை மலையை நாம் சிவமாக பார்த்தால், அவர்கள் மலை அமைந்த அந்த பீடபூமி பகுதி முழுவதையும் சிவமாகவே பார்க்கிறார்கள்!.
Tuesday, August 9, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 14
இந்த மேற்கு முக தரிசனத்திற்கு பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நம்முடன் கூடவே வருகிறார்போல் திருக்கைலை நாதர் தோற்றமளித்துக் கொண்டே வந்தார். கூடவே நந்தி பர்வதம் மலையும்.,:)
Subscribe to:
Posts (Atom)