நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும் கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.
பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது. என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.